உங்களால் என்ன செய்ய முடியும்?

VISION2040
Country With Equity - Efficiency - Opportunity

உங்களால் என்ன செய்ய முடியும்?

நீங்கள் இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலுமோ இருக்கலாம்.நீங்கள் இந்தப் பூமியில் வாழும்வரை,பலவழிகளில் எமது வேலைத்திட்டங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.எமது இந்த அழைப்பானது தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், விரிவாகக் கூறின், கல்விமான்கள்,வணிகத் தலைவர்கள்,முதலீட்டாளர்கள், தொழில்வல்லுநர்கள் ,இளைஞர் மற்றும் வியாபாரம் சார் அமைப்புக்கள்,கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார் நிறுவனங்கள்,ஆய்வு மையங்கள், இலாப நோக்கற்ற அமைப்புக்கள், நன்கொடையாளர்கள் , சமூக ஊக்குவிப்பாளர்கள்,ஆலோசனை வளங்குபவர்கள் மற்றும் ஊடகம் போன்றனவற்றுக்கு வழங்கப்படுகின்றது.

பங்குதாரர் ஆகுதல்: எமது நோக்கத்தினை நீங்கள் உள்வாங்கி ஆதரவளிப்பீர்களானால்,நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விடயம் எம்மில் ஒருவராக நீங்கள் இணைவதே ஆகும்.நீங்கள் ஒரு இலங்கைக் குடிமகனாக இருந்தால் பங்குதாரராக இருக்க முடியும்.அப்படி இணைய விரும்பினால் இலங்கையில் உங்களது முகவரி,உங்கள் அடையாள அட்டை இலக்கம் மற்றும் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி போன்வற்றை எமக்கு வழங்கிவைக்க வேண்டும்.

வாரியத் தீர்மானம் # 01/2022 இன் படி ஒரு தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச பங்குகளின் எண்ணிக்கை 200 ஆகும்.ஒரு பங்கின் மதிப்பு ரூ. 100 ஆகும் . இந்த எல்லையானது இரண்டு காரணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது;

  • ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில்,எமது ஆணையானது ஒரு பங்குதாரர் பங்குலாபத்தை பெறுவதை தடுக்கிறது.ஆகவே பங்குதாரரின் பொருளியல் சார்ந்த அர்ப்பணிப்புக்கள் இங்கு மட்டுப்படுத்தப்படும்.
  • லாப நோக்கத்தை மட்டும் கொண்ட எந்தச் சாராரும் எங்கள் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், எங்கள் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதற்கும் , பங்குகளை மொத்தமாக வாங்குவதை நாம் விரும்பவில்லை.
  • பங்குதாரர் ஆவதற்கான முதற்கட்டமாக , கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • நீங்கள் கோரிய பங்குகளின் மதிப்புக்கான விலைப்பட்டியலினை எங்கள் நிறுவனத்தின் செயலாளர் உங்களுக்கு அனுப்புவார்.அதில் நீங்கள் பணத்தை மாற்றவும் வைப்புச்செய்யவும் எங்களுடைய வங்கி விவரங்கள் வழங்கப்படும்

பங்குதாரராக விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்

மேலும் தகவல் தேவைப்பட்டால், +94-77-300-2040 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

எங்கள் நிகழ்ச்சிகள் /திட்டங்களுக்கு ஆதரவு தர : Vision2040 இன் முயற்சிகளை பிரத்தியேகமாக ஆதரிக்கும் எங்களது அதிகாரப்பூர்வ கூட்ட நிதித் தளமான https://srilankanworld.com மூலம் நீங்கள் எங்கள் பணிக்கு ஆதரவளிக்கலாம்.

நன்கொடை அளிக்க நீங்கள் எங்களிடம் நேரடியாகவோ அல்லது பணமாகவோ நன்கொடை அளிக்கலாம். நன்கொடையாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே இருப்பதால் நன்கொடைகளுக்கு வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு எங்களை 077-300- 2040 அல்லது மின்னஞ்சல்: contact@vision2040.lk இல் தொடர்பு கொள்ளவும்.

விஷன் 2040 சிந்தி/செயற்படு குழுவில் சேர: நீங்கள் எங்கள் முக்கிய குழுவில் உறுப்பினராகவோ அல்லது துணைக் குழுவிலோ இருந்து நாட்டின் மாற்றத்திற்கு பங்களிக்கலாம். எங்களுடைய திட்டமிடல், வடிவமைத்தல், செயல்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பணிகளில் உங்கள் அறிவு, அனுபவம் மற்றும் திறன்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

எங்கள் ஆதரவைத் நாடுங்கள்: விஷன் 2040ன் பயனாளிகளாக நீங்களும் உங்கள் சமூகமும் மாறமுடியும். தொழில்நுட்பம் சார்ந்த முனைவுகள், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி, வேளாண் தொழில்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பல திட்டங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. எனவே, தொலைபேசி/வாட்ஸ்அப் அழைப்பு அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.